ஜனநாயகன் பட எடிட்டர் மீது நடவடிக்கை.. லீக் ஆக காரணமாக இருந்ததாக கூறி சஸ்பெண்ட்

ஜனநாயகன் படம் இணையத்தில் லீக் ஆனது ஒட்டுமொத்த சினிமா துறையினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லீக் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஜினி, கமல் உட்பட பலரும் குரல் கொடுத்தனர்.
தற்போது போலீஸ் விசாரணையில் ஜனநாயகன் எடிட்டர் பிரதீப் ராகவ் உடன் பணியாற்றிய பிரீலான்ஸ் எடிட்டர் தான் படத்தை திருடி லீக் செய்தது தெரியவந்து இருக்கிறது.
நடவடிக்கை
இந்நிலையில் ஜன நாயகன் எடிட்டர் பிரதீப் இ ராகவ் மீது எடிட்டர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
ஜனநாயகன் லீக் ஆக காரணமாக இருந்ததாக கூறி பிரதீப் ராகவ்வை சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்து இருக்கின்றனர்.
இது பற்றி வெளியாகி இருக்கும் அறிக்கை இதோ.






