புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..?

ரூ. 1000 கோடி
தங்கல், பாகுபலி 2, ஜவான், கேஜிஎப் 2, புஷ்பா 2 என தொடர்ந்து பல இந்திய திரைப்படங்கள் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்த சாதனை படைத்தன.
இந்த ரூ. 1000 கோடி வசூல் பட்டியலில் கடந்த ஆண்டு துராந்தர் முதல் பாகம் இணைந்தது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு வெளிவந்த துரந்தர் இரண்டாம் பாகமும் ரூ. 1000 கோடி வசூலித்தது.
இதன்மூலம் ரூ. 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையும் 10வது திரைப்படமாக துரந்தர் 2 இடம்பிடித்தது. அதுவும், இப்படம் 7 நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்துள்ளது.
வசூல் விவரம்
இந்த நிலையில், துராந்தர் 2 இதுவரை உலகளவில் ரூ. 1650 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ரூ. 1625 கோடி வசூல் செய்த புஷ்பா 2 திரைப்படத்தின் சாதனையை துராந்தர் 2 முறியடித்துள்ளது.
மேலும், அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களின் 10 பட்டியலில் 3வது இடத்தை துராந்தர் 2 பிடித்துள்ளது. முதலிடத்தில் தங்கல் மற்றும் இரண்டாம் இடத்தில் பாகுபலி 2 ஆகிய படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.






