ஜனனியை வெளியேறியதை வைத்து பக்காவாக காய் நகர்த்தும் குணசேகரன்… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ராணா என்ட்ரியில் இருந்து கதையே அப்படியே மாறி வருகிறது.
தனது அம்மாவை கொன்ற குணசேகரன் குடும்பம் மொத்தமாக அழிய வேண்டும் என ராணா சைலன்டாக எல்லா விஷயங்களையும் செய்து வருகிறார். மதிவதனி என்ன செய்கிறார் என்பதை காண அவரது வீட்டில் கேமரா வைத்துவிட்டார்.
இதனால் ஜனனி-மதிவதனி போடும் பிளான்கள் அனைத்தையும் தெரிந்து கொள்கிறார். இன்னொரு பக்கம் ஜனனிக்கு குணசேகரன் வீடியோ அனுப்புவதும், அந்த பிரச்சனையில் கதிரை சிக்க வைப்பதும் என கிரிமினல் வேலைகள் பல செய்கிறார்.
புரொமோ
இன்றைய எபிசோடின் புரொமோவில், மதிவதனி இந்த விஷயத்தில் நீங்கள் செய்தது சரியில்லை என்று தான் தோன்றுகிறது. அங்கு நடப்பதில் இருந்து நீங்கள் ஒதுங்கி போனதும் போல் ஆகாதா என கேட்கிறார்.
அடுத்த குணசேகரன் கையில் மதிவதனி-ஜனனி பேசும் வீடியோ கிடைக்க அதை ஈஸ்வரியிடம் காட்டுகிறார். குணசேகரனுக்கு தகுந்த தண்டனை வாங்கி தர வேண்டும் என ஜனனி கூறும் வீடியோ தான் அது.
இவர்கள் இருவரும் கடைசி வரை வில்லனாக இருந்து அடித்துக்கொள்ள வேண்டும் என கூறி ராணா சந்தோஷப்படுகிறார். இதோ புரொமோ,






