கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன… பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
3 மகன்கள், 2 மகள்கள் என அழகிய குடும்பமாக வாழ்ந்து வரும் ஜோடி பாண்டியன்-கோமதி.
இவர்களின் குடும்ப கதையாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
இப்போது கதையில் பாண்டியன் மற்றும் கோமதிக்கு, மயில் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிய வருகிறது.
பாண்டியன் இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம் நீ முதலில் மயிலை பார்த்துவிட்டு நலம் விசாரித்துவிட்டு வா என்கிறார்.
எபிசோட்
இன்றைய எபிசோடில், மீனா, ராஜி பேசிக்கொண்டிருக்கும் போது செந்தில் வருகிறார்.
மீனாவிடம் நடந்த விஷயம் குறித்து பேசும்போது அவர் காலையில் இருந்து இதுவே பேசிக்கொண்டிருக்கிறேன், வேறு ஏதாவது பேசுங்கள் என்கிறார். பின் பேச்சு வாக்கில் மீனா, சரவணன் தனது தோழியை அடிக்கடி சந்தித்து பேசும் விஷயத்தை கூறுகிறார்.
இதைக்கேட்டதும் கோமதி, செந்தில் இருவரும் ஷாக் ஆகிறார்கள். மீனாவோ, விவாகரத்து நடக்கும் இந்த நேரத்தில், மாமா அடிக்கடி அந்த பெண்ணை சந்தித்து பேசுவதும், மயில் இந்த நிலைமையில் இதெல்லாம் தேவையா என்கிறார்.
அடுத்து கதிருடன் தனது அண்ணனை பார்த்து கோபப்பட்ட சக்திவேல் வீட்டிற்கு வந்து முத்துவேலை கேள்வியாக கேட்கிறார். ஆனால் முத்துவேல் ஏதோ சமாளிக்க சக்திவேல் அவர் கூறுவதை நம்பவில்லை.






