தமிழ்ல் ஹீரோயினாக துரந்தர் சாரா அர்ஜுன்.. யாருக்கு ஜோடி பாருங்க

நடிகை சாரா அர்ஜுன் தமிழில் குழந்தை நட்சத்திரமாக புகழ் பெற்றவர். தெய்வத்திருமகள், சைவம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
அவர் 19 வயதிலேயே ஹிந்தி சினிமாவில் அறிமுகம் ஆகி, ரன்வீர் சிங் ஜோடியாக துரந்தர் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் அடுத்து ஏராளமான பட வாய்ப்புகள் அவருக்கு குவிகிறது.
தனுஷ் ஜோடியா?
இந்நிலையில் சாரா அர்ஜுனை தனுஷ் ஜோடியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் D56 படத்தில் ஹீரோயினாக ருக்மிணி வசந்த் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். ஆனால் அவர் தேதிகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறதாம். அதனால் தற்போது சாரா அர்ஜுனை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.






