ஜனநாயகன் லீக்.. ஒரே வரியில் ஸ்டாலின் கோபமாக கொடுத்த பதில்

விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீசுக்கு முன்பே பைரஸி இணையதளங்களில் லீக் ஆகி இருப்பது பற்றி சினிமா துறையினர் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என ரஜினி, கமல், சூர்யா தொடங்கி ஏராளமான தமிழ், தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
ஸ்டாலின் பதில்
இந்நிலையில் ஜனநாயகன் லீக் ஆனது பற்றி முதலமைச்சர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
“அது பற்றி பதில் சொல்ல வேண்டும் என எனக்கு அவசியம் இல்லை” என கோபமாக பதில் அளித்து இருக்கிறார்.
மேலும் ஜனநாயகன் லீக் ஆக உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் என ஆதவ் அர்ஜுனா சொல்கிறாரே என கேட்டதற்கு, “நான் ஆதவ் அர்ஜுனா நியூஸ் எல்லாம் படிப்பதில்லை” என ஸ்டாலின் காட்டமாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
Q: #Jananayagan leaked online.. Your Thoughts on this..❓#MKStalin: There is no need for me to answer that.
Q: Aadhav Arjuna said Udhaynidhi leaked the film..#MKStalin: Is it..? I don’t know.. I don’t read Aadhav Arjuna news..pic.twitter.com/Od02ngp8O3— Laxmi Kanth (@iammoviebuff007) April 12, 2026






