விஜய் தான் முதல்வர்னு சொன்னேனா? நடிகர் R.பார்த்திபன் விளக்கம்

நடிகர் விஜய் தற்போது தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விஜய் எங்கு போனாலும் அவரை நேரில் பார்க்க ரசிகர் கூட்டம் பெரிய அளவில் குவிந்துவிடுகிறது.
இதை எல்லாம் பார்க்கும்போது விஜய் தான் அடுத்த முதல்வர் என நடிகர் பார்த்திபன் சொன்னதாக இணையத்தில் ஒரு செய்தி பரவி இருக்கிறது.
நான் சொல்லவே இல்லை
இது பற்றி நடிகர் பார்த்திபன் விளக்கம் கொடுத்து இருக்கிறார். தான் அப்படி பேசவே இல்லை எனவும் கூறி இருக்கிறார்.
இதற்க்கு முன் நடிகர் பார்த்திபன் த்ரிஷா பற்றி சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.






