கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா… சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட்

சிறகடிக்க ஆசை
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்க உள்ளது, அதனால் பரபரப்பான அரசியல் களம் அமைந்து வருகிறது.
ஒவ்வொரு கட்சியினரும் பரபரப்பாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள், இதில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பிரச்சாரம் குறித்து தான் ஒவ்வொரு நாளும் பரபரப்பான தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.
இந்த தேர்தல் இருக்கட்டும் சிறகடிக்க ஆசை சீரியலிலும் ஒரு தேர்தல் நடக்கிறது, அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். சிந்தாமணியா-மீனாவா இதில் யார் வெற்றிப்பெற போகிறார்கள் என்பது தெரியவில்லை.
எபிசோட்
இன்றைய எபிசோடில், பரபரப்பான பூ சங்க வியாபாரிகள் தேர்தல் நடக்கிறது. அதில் சிந்தாமணி-மீனா இருவரும் போட்டிபோடுகிறார்கள். முதலில் எல்லோரும் வாக்குகள் செலுத்தி வர பின் கணக்கெடுப்பு நடந்தது.
அதில் முதல் கட்ட முடிலில் சிந்தாமணி அதிக வாக்குகளுடன் இருப்பதாக அறிவிக்க மீனா தரப்பு ஷாக் ஆனார்கள். பின் இறுதிக்கட்ட முடிவில் சிந்தாமணி தான் ஜெயித்தார் என கூற அவரது டீம் செம கொண்டாட்டத்தில் இறங்கினர்.
கடைசியில் ஒரு அதிகாரி சிந்தாதிரிப்பேட்டை விட்டுவிட்டோம் அதை பார்த்ததும் இறுதி முடிவு வரும் என்கிறார்.
அந்த பெட்டியை கணக்கெடுத்ததில் மீனா, சிந்தாமணியை விட அதிக வாக்குகள் பெற்று ஜெயிக்கிறார். பூ வியாபாரிகள் சங்க தலைவரான மீனாவிற்கு பூ மாலை எல்லாம் போட்டு கொண்டாடிவிட்டார்கள்.
வீட்டிற்கு வந்த மீனாவிற்கு அண்ணாமலை மனதார வாழ்த்து கூறி சந்தோஷப்படுகிறார், வழக்கம் போல் விஜயா ஏதோ சொல்லிவிட்டு செல்கிறார்.






