சன் டிவியின் ஆடுகளம் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை டெல்னா டேவிஸ்… காரணமே இதுதானாம்

சன் டிவியின் ஆடுகளம் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை டெல்னா டேவிஸ்… காரணமே இதுதானாம்

சன் டிவி

சன் தொலைக்காட்சியில் ஆடுகளம் என்ற சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.

சல்மானுள் மற்றும் டெல்னா டேவிஸ் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துவந்த இந்த சீரியலில் காத்தாடி ராமமூர்த்தி, சச்சு, காயத்ரி ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

நடிகர் டெல்லி கணேஷ் இந்த சீரியலில் நடிக்க கமிட் ஆகி சில தினங்களில் படப்பிடிப்புகளிலும் கலந்துகொண்ட நிலையில் இறந்துவிட அவருக்கு பதில் காத்தாடி ராமமூர்த்தி நடித்து வருகிறார்.  

சன் டிவியின் ஆடுகளம் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை டெல்னா டேவிஸ்... காரணமே இதுதானாம் | Delna Davis Quit Sun Tv Aadukalam Serial

காரணம்

தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் இருந்து நடிகை டெல்னா டேவிஸ் வெளியேறிவிட்டாராம்.

சன் டிவியின் ஆடுகளம் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை டெல்னா டேவிஸ்... காரணமே இதுதானாம் | Delna Davis Quit Sun Tv Aadukalam Serial

ஆரம்பத்தில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் சில தினங்களுக்கு முன் மதிய நேர ஸ்லாட்டுக்கு மாற்றினார்கள். அப்போது முதல் ஹீரோ, ஹீரோயின், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் காயத்ரி ஜெயராமன் என சிலர் கடும் அதிருப்தியில் இருந்துள்ளனர்.

சன் டிவியின் ஆடுகளம் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை டெல்னா டேவிஸ்... காரணமே இதுதானாம் | Delna Davis Quit Sun Tv Aadukalam Serial

டெல்னா டேவிஸ் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் கூற பேச்சு வார்த்தை நடந்துள்ளது. இப்போது என்ன தகவல் என்றால், சத்யா கதாபாத்திரத்தில் நடித்துவந்த டெல்னா டேவிஸ் ஆடுகளம் சீரியலில் இருந்து வெளியேறுகிறார் என்பது தான்.

இந்த செய்தி ஆடுகளம் சீரியல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *