சேரன் – சந்தா திருமணம்.. ரூ. 8 லட்சம் தேவை… அய்யனார் துணை சீரியல் புரோமோ

சேரன் – சந்தா திருமணம்.. ரூ. 8 லட்சம் தேவை… அய்யனார் துணை சீரியல் புரோமோ


அய்யனார் துணை

கடந்த வாரம்

சேரன் அண்ணன் தன்னிடம் பேசவில்லை என்பதற்காக, பல்லவன் தனது கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியை தனது அண்ணன்களுக்கும், அண்ணிக்கும் அர்ப்பணித்தார். பல்லவனின் இந்த செயலை பார்த்து நெகிழ்ந்துபோன சேரன், மீண்டும் தனது தம்பியிடம் பேச தொடங்கியுள்ளார்.

வரும் வாரம்

சேரன் – சந்தா திருமணம் குறித்து குடும்பத்தில் உள்ள அனைவரும் பேசுகிறார்கள். வருகிற வெள்ளிக்கிழமை நாள் நன்றாக இருக்கிறது, அன்றே திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என முடிவு செய்கின்றனர்.

இதன்பின், திருமணத்திற்கு எவ்வளவு செலவாகும் என கணக்கு போட, கிட்டதட்ட ரூ. 7 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை தேவை என நிலா கூறுகிறார்.

அவ்வளவு பணத்திற்கு நாம் என்ன செய்வது என சோழன் கூற, சம்பாதித்த பணத்தை எல்லாம் என்ன செய்தீர்கள் என நிலா கேட்கிறார். ஆனால், தாலி மட்டும் நீங்க எடுங்க, மணப்பெண்ணுக்கு செயின் நான் போடுறேன் என நடேசன் கூறுகிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *