2027 வரை படம் நடிக்க மாட்டாரா..? நடிகர் அஜித் எடுத்துள்ள அதிரடி முடிவு..

2027 வரை படம் நடிக்க மாட்டாரா..? நடிகர் அஜித் எடுத்துள்ள அதிரடி முடிவு..

அஜித்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குட் பேட் அக்லி படம் பிளாக்பஸ்டர் ஆனது.

2027 வரை படம் நடிக்க மாட்டாரா..? நடிகர் அஜித் எடுத்துள்ள அதிரடி முடிவு.. | Ajith Kumar Starting New Production Company

இதன்பின், மீண்டும் அப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து பணியாற்ற அஜித் முடிவு செய்தார்.

AK 64 படத்தை இயக்கப்போவது ஆதிக் என தெரியவந்தது. ஆனால், தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. எந்த நிறுவனம் AK 64 படத்தை தயாரிக்கப்போகிறார்கள் என்பதும் கேள்விக்குறியாக இருந்தது.

2027 வரை படம் நடிக்க மாட்டாரா..? நடிகர் அஜித் எடுத்துள்ள அதிரடி முடிவு.. | Ajith Kumar Starting New Production Company

இதற்கிடையில் 2027ஆம் ஆண்டு ஜனவரி வரை அஜித் கார் ரேசிங்கில் மட்டுமே கவனம் செலுத்துப்போகிறார், போடப்பட்டுவிட்டது என தகவல் வெளியானது. இதனால், அவர் 2027 ஜனவரி வரை படத்தில் நடிக்க முடியாது என்பதால் ரசிகர்கள் வருத்தமடைந்தனர்.

தயாரிப்பு நிறுவனம் 

இந்த நிலையில், அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் எல்எல்சி என்கிற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை நடிகர் அஜித் தென்னிந்திய திரைப்பட வர்த்தகத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை செலுத்தி ஆயுட்கால உறுப்பினராகவும் இணைந்துள்ளாராம்.

2027 வரை படம் நடிக்க மாட்டாரா..? நடிகர் அஜித் எடுத்துள்ள அதிரடி முடிவு.. | Ajith Kumar Starting New Production Company

இதனால், முழு நேர தயாரிப்பாளராக அஜித் களமிறங்கப்போகிறாரா அல்லது தனது தயாரிப்பிலேயே படங்கள் நடிக்க முடிவு செய்துள்ளாரா என பல கேள்விகள் எழுந்துள்ளன. 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *