மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி… எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது
குடும்ப கதை என்றாலும் ஒவ்வொரு நாளும் பரபரப்பின் உச்சமாகவே ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது.
கதையில் சொத்தை வைத்து குடும்பத்தை கைக்குள் வைத்து ஆட்டி வைத்த குணசேகரன் திடீரென தனது சொத்துக்களை தம்பிகள் பெயரில் எழுதி வைத்துவிட்டு தனது அறையிலேயே அடைந்து கிடக்கிறார்.
ஆனாலும் தம்பிகளை ஏதாவது சொல்லி வீட்டில் பிரச்சனையை கிளப்பி வருகிறார்.
புரொமோ
குடும்பத்திற்காக ஓடிக் கொண்டிருந்த ஜனனி கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு கொஞ்சம் சந்தோஷத்தை கொடுக்கலாம் என சக்தி அவரை கொடைக்கானல் அழைத்து செல்கிறார்.
அங்கு இருவரும் சந்தோஷமாக தான் இருந்தார்கள், ஆனால் தேவசகாயம் ஆட்கள் அவர்களை தேடி வர அங்கேயே பிரச்சனையை தொடங்கியது. வீட்டிற்கு திரும்பும் நேரத்தில் தேவசகாயம் ஆட்கள் ஜனனி-சக்தியை துரத்தி வர இருவரும் எப்படியோ தப்பித்துவிடுகிறார்கள்.
இன்றைய எபிசோட் புரொமோவில், சக்தி மயக்க மடைந்த ஜனனியை மருத்துவமனையில் சேர்க்கிறார். அங்கு ஈஸ்வரிக்காக வந்த ரேணுகா-நந்தினி, ஜனனியை கண்டு ஷாக் ஆகிறார்கள்.
இன்னொரு பக்கம் வீட்டில் விசாலாட்சி, இந்த வீட்டுப் பெண்கள் நிறைய கஷ்டப்பட்டு விட்டார்கள், இனியும் அவர்களை நோகடிக்க கூடாது என தனது மகன்களிடம் கூறி புலம்புகிறார்.






