குக் வித் கோமாளியில் யாரும் எதிர்பார்காத மாற்றம்.. போட்டியாளர்கள் யார் தெரியுமா?
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இருப்பினும் கடந்த சில வருடங்களாக சில சர்ச்சைகளையும் நிகழ்ச்சி சந்தித்து வருகிறது.
நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் வெளியேறியது, மணிமேகலை – பிரியங்கா மோதல், நிறுவனமே மாற்றப்பட்டது என பல சர்ச்சைகள் ஏற்பட்டது. மேலும் தற்போது நடுவராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் பெண் ஆடை வடிவமைப்பாளர் ஒருவரை இரண்டாம் திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் என்கிற சர்ச்சையும் வந்தது.
இப்படி பல சர்ச்சைகளை சந்தித்த குக் வித் கோமாளியின் 7ம் சீசன் விரைவில் விஜய் டிவியில் தொடங்க இருக்கிறது. அதன் ப்ரோமோவும் சமீபத்தில் வெளியாகி இருந்தது.
போட்டியாளர்கள்?
இந்நிலையில் லேட்டஸ்ட் ஆக ஒரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த முறை போட்டியாளர்களாக நிஜமான ஜோடிகள் வர போகிறார்களாம்.
அதனால் இரண்டு குக் – ஒரு கோமாளி என ஷோ மாறப்போகிறதாம். இதனால் ஷோ இன்னும் சுவாரஸ்யம் ஆகுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்.






