விஜய் சேதுபதியை மாத்திபுட்டாங்கடா.. தாய்க்கிழவி படத்தில் நீக்கப்பட்ட காட்சி வெளியானது

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடிப்பில் சமீபத்தில் ரிலீஸ் ஆன தாய்க்கிழவி படம் நல்ல வசூலை குவித்து இருக்கிறது. 50 கோடிக்கும் மேல் வசூல் வந்திருக்கும் நிலையில் மிகப்பெரிய லாபமும் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கிறது.
சமீபத்தில் படத்தின் வெற்றி விழாவும் நடைபெற்றது. லாபத்தில் சிவகார்திகேயன் பங்கு தருவதாக கூறி இருப்பதாக ராதிகா மேடையில் தெரிவித்தார்.
நீக்கப்பட்ட காட்சி
இந்நிலையில் தாய்க்கிழவி படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒரு காட்சியை தற்போது வெளியிட்டு இருக்கின்றனர். அதில் விஜய் சேதுபதியை கலாய்க்கும் வகையில் சீன் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்கின்றனர்.
பிக் பாஸில் இருந்து கமல்ஹாசன் வெளியேறிய பின் விஜய் சேதுபதி அவர் இடத்திற்கு வந்தது பற்றிய காட்சி தான் அது. வீடியோ இதோ.






