வில்லனாக மிரட்டிய நடிகர் அர்ஜுன் தாஸிற்கு காதல் தோல்வி… அவரே போட்ட பதிவு

அர்ஜுன் தாஸ்
தமிழ் சினிமாவில் இருக்கும் ஒவ்வொரு வில்லன் நடிகர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் உள்ளது.
அப்படி தனது தனித்துவமான குரல் மற்றும் வித்தியாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் தான் அர்ஜுன் தாஸ். வில்லன் லுக்கில் மிரட்டினாலும் அவரது குரலுக்கு மயங்காதவர்களே இல்லை என்று தான் கூற வேண்டும்.
2012ம் ஆண்டு Perumaan என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவருக்கு கைதி, அந்தகாரம், மாஸ்டர், விக்ரம், போர், குட் பேட் அக்லி படங்கள் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார்.
இன்ஸ்டா ஸ்டோரி
பல பெண்களின் கனவுக் கண்ணனாக வலம் வரும் அர்ஜுன் தாஸ் தனது இன்ஸ்டாவில் ஸ்டோரியில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில் அவர், ஒருவரை மிகவும் காதலித்த பிறகு அவர்கள் உங்கள் இதயத்தை உடைத்துவிட்டால்… அதிலிருந்து ஒருவர் எப்படி முன்னேற முடியும் என்ற பதிவு போட்டுள்ளார்.
அந்த பதிவை பார்த்த ரசிகர்கள் காதல் தோல்வியா என நிறைய கமெண்ட் செய்து வருகின்றனர்.






