அஜித் குமாருக்கு பிரம்மாண்ட காரை பரிசாக அளித்த மஹிந்திரா நிறுவனம்.. அந்த காரின் விலை எவ்வளவு தெரியுமா.

அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக கொண்டாடப்படுபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் குட் பேட் அக்லி.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் AK 64 திரைப்படத்திற்காக கைகோர்த்துள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. இது அஜித் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.
Formula E தீம் எஸ்யூவி
சினிமாவை தாண்டி நடிகர் அஜித் கார் ரேஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், கார்களின் மீது தனி அன்பை கொண்டுள்ளார். இந்த நிலையில், அஜித் குமாருக்கு மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் ஆர்.வேலுசாமி, உலகின் முதல் Formula E தீம் எஸ்யூவி காரை பரிசாக அளித்துள்ளார்.
அஜித் குமாரின் கார் ரேஸிங் ஆர்வத்தை பாராட்டி, கௌரவிக்கும் விதமாக, இந்த காரை அவருக்கு அன்பளிப்பாக வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த பிரம்மாண்ட காரின் விலை ரூ. 30 லட்சம் என தகவல் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






