முடிவுக்கு வரும் கலைஞர் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. வருத்தத்தில் ரசிகர்கள்..

காத்துவாக்குல ரெண்டு காதல்
ஜீ தமிழ், சன் டிவி, விஜய் டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதே போல், கலைஞர் டிவியிலும் கௌரி, ருத்ரா, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதில் ராதிகாவின் ரடான் மீடியா தயாரிப்பில் உருவாகி வரும் சீரியல்தான் காத்துவாக்குல ரெண்டு காதல்.
இந்த சீரியலில் அணில் சவுத்ரி, பாப்ரி கோஷ், மௌனிகா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
முடிவுக்கு வரும் சீரியல்
கடந்த ஆண்டு கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கி இந்த சீரியல் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆம், காத்துவாக்குல ரெண்டு காதல் சீரியல் விரைவில் முடிவுக்கு வருகிறது.
சமீபத்தில் இந்த சீரியலின் இறுதி நாள் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. காத்துவாக்குல ரெண்டு காதல் சீரியல் முடிவுக்கு வருவது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது.






