நடிகை ரேகாவின் மகளுக்கு கோலாகலமாக நடந்து முடிந்த திருமணம்… வீடியோவுடன் இதோ

நடிகை ரேகா
பாரதிராஜா இயக்கிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த நடிகைகள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை ரேகா.
தனது முதல் படத்தில் ஜெனிபர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் கவனத்தை பெற்றார். பின் அடுத்தடுத்து புன்னகை மன்னன், செண்பகமே செண்பகமே, என் பொம்ம குட்டி அம்மாவிற்கு, பாட்டுக்கு நான் அடிமை, ராசாவே உன்னை நம்பி என வெற்றிப்படக்ள் நடித்தார்.
அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, ராமராஜன் என பலருடன் நடித்துள்ளார்.
திருமணம்
கடந்த 1996ம் ஆண்டு ஜார்ஜ் ஹேப்பிஸ் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரேகாவிற்கு அனுஷா என்ற மகள் உள்ளார். சினிமாவில் பிஸியாக ரேகா வலம் வந்தாலும் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் தனது மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்துள்ளார் ரேகா.
திருமணம் எப்போது நடந்தது என்பது தெரியவில்லை, ஆனால் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை ரேகா தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கிறார்.
இதோ பாருங்கள்,






