மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் கானின் மனைவியை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய குடும்ப புகைப்படம்

மூன்று முடிச்சு
சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மூன்று முடிச்சு சீரியலை பற்றி நாம் அனைவரும் அறிவோம். TRP-யில் நம்பர் 1 இடத்தை இந்த சீரியல் பிடித்துள்ளது.
நடிகர் நியாஸ் கான்
மூன்று முடிச்சு சீரியலில் சூர்யா என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகர் நியாஸ் கான். இவர் இதற்கு முன் ‘புதுப்புது அர்த்தங்கள்’, ‘சண்டக்கோழி’ ஆகிய சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆனால், மூன்று முடிச்சு சீரியல் இவருக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
குடும்பம்
சீரியலில் தனக்கென்று தனி ஸ்டைலில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வரும் நியாஸ் கானின் குடும்பம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்காது. இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், நடிகர் நியாஸ் கான் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க..






