விஜய் டிவியிலேயே புதிய சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள ஆஹா கல்யாணம் சீரியல் நடிகை காயத்ரி.. இதோ போட்டோ

விஜய் டிவி
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று தான் விஜய் டிவி.
பொழுதுபோக்கிற்காக என்ன வேண்டும், சீரியலா, ரியாலிட்டி ஷோக்களா எல்லாமே இங்கே இருக்கு என நிறைய விஷயங்கள் ஒளிபரப்பி வருகிறார்கள்.
சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அய்யனார் துணை, மகாநதி, சின்ன மருமகள் என தொடர்ந்து நிறைய வெற்றிகரமாக தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
புதிய என்ட்ரி
விஜய்யில் கடந்த வருடம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் ஆஹா கல்யாணம். இந்த தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி வந்தவர் தான் நடிகை காயத்ரி.
அந்த சீரியல் முடிந்த கையோடு அவர் ஜீ தமிழில் புதிய தொடரில் கமிட்டாகி நடித்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் காயத்ரி விஜய் டிவி பக்கம் வந்துள்ளார். அதாவது மகளே என் மருமகளே என்ற சீரியலில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அவரது என்ட்ரியின் புகைப்படம் வெளியாகியுள்ளது,






