2ஆம் திருமணம்.. முதல் முறையாக பேசிய நடிகை மீனா

2ஆம் திருமணம்.. முதல் முறையாக பேசிய நடிகை மீனா


நடிகை மீனா

குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி அதன்பின் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மீனா. ரஜினி, கமல், சிரஞ்சீவி, அஜித், நாகார்ஜூனா, மோகன்லால் என பல டாப் ஸ்டார்ஸுடன் இணைந்து நடித்திருக்கிறார். அடுத்ததாக இவர் நடிப்பில் மலையாளத்தில் திரிஷ்யம் 3 படம் வெளிவரவிருக்கிறது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

2ஆம் திருமணம்.. முதல் முறையாக பேசிய நடிகை மீனா | Meena Talk About Her Second Marriage Fake News



நடிகை மீனா கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்கிற மகள் உள்ளார். மீனா எப்படி தனது சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க தொடங்கினாரோ, அதே போல் நைனிகாவும் தற்போது சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தெறி படத்தில் அறிமுகமானார். இதன்பின் சில படங்கள் நடித்தாலும், தற்போது படிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

2ஆம் திருமணம்.. முதல் முறையாக பேசிய நடிகை மீனா | Meena Talk About Her Second Marriage Fake News

மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த 2022ஆம் ஆண்டு காலமானார். இவருடைய மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன்பின், மீனா இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக பல விதமான வதந்திகள் பரவின. இந்த நிலையில், வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை மீனா தற்போது பேசியுள்ளார்.

2ஆம் திருமணம்



“எனக்கு 2வது திருமணம் என பரவும் வதந்திகள் என்னை மிகவும் காயப்படுத்தும். முன்னாடி என்னை பற்றிய வதந்திகள் வரும்போது எனக்கு தெரிய ரொம்ப லேட்டாகும். ஆனா, இப்போ சோசியல் மீடியாவில் ஒரு விஷயம் வந்துச்சுன்னா அது பெரிதாகி, சீக்கிரமாவே தெரிந்துவிடுகிறது.

நான் ஒரு பெண் செலிபிரிட்டி, சிங்கிளாக இருக்கிறேன் என்பதற்காக, உண்மை என்ன என்று தெரியாமல் என்ன வேணுமானாலும் பேசலாமா? கேக்குறதுக்கு ஆள் இல்லைன்னு இப்படி பண்றீங்களா? இதெல்லாம் பார்க்கும் போது ரொம்ப கோபமா இருக்கு” என கூறியுள்ளார். 

2ஆம் திருமணம்.. முதல் முறையாக பேசிய நடிகை மீனா | Meena Talk About Her Second Marriage Fake News


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *