சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ

சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது சரவணன் – தங்கமயில் விவாகரத்து பிரச்சனை தான் போய்க்கொண்டிருக்கிறது. பாண்டியன் குடும்பத்தை மொத்தமாக ஏமாற்றிய காரணத்தினாலும், அனைவரையும் சிறைக்கு அனுப்பிய காரணத்தினாலும் இனி மயிலுக்கு இந்த குடும்பத்தில் இடம் இல்லை என முடிவு எடுத்துவிட்டனர்.

சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ | Pandian Stores 2 Serial New Promo Video

விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சரவணன் தனக்கு விவாகரத்து வேண்டும் என கேட்டாலும், மயில் தனக்கு விவாகரத்து வேண்டாம் என கூறிவிட்டார். இதனால் வழக்கு நீண்டுகொண்டே இருக்கிறது. இந்த நிலையில், தனது வீட்டிலும் தன்னை திட்டுகிறார்கள், சரவணனும் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துவிட்டார்.

சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ | Pandian Stores 2 Serial New Promo Video

மயில் தற்கொலை செய்துகொள்ள போவதை பார்த்த மீனா, அவரை காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வந்தார். செலவுக்காக காசு கொடுத்தார் மீனா, ஆனால் தன்னால் இப்படியே இருக்க முடியாது, எனக்கு ஒரு வேலை வாங்கி கொடுக்க முடியுமா என மீனாவிடம் மயில் கேட்க, பார்க்கிறேன் என அவர் கூறினார்.

சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ | Pandian Stores 2 Serial New Promo Video

சரவணன் – அஞ்சலி

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் கோவிலுக்கு வரும் மீனா தனக்கு தெரிந்தவரிடம் பேசும்போது, அவர் மாமியாரை பார்த்துக்கொள்ள ஒருவர் வேண்டும் என கூறுகிறார். ஆகையால் இந்த வேலையை தங்கமயிலுக்கு மீனா வாங்கி கொடுக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ | Pandian Stores 2 Serial New Promo Video

அவரிடம் பேசிக்கொண்டே இருக்கும்போது, கோயிலில் சரவணனும் அவருடைய தோழி அஞ்சலியும் இருப்பதை மீனா பார்த்து அதிர்ச்சியடைகிறார். அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து ஷாக்காகும் மீனா அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *