கில்லி, படையப்பா, மங்காத்தா வரிசையில் இந்த வாரம் பிளாக்பஸ்டர் தமிழ் படம் ரீ-ரிலீஸ் ஆகிறது..

கில்லி, படையப்பா, மங்காத்தா வரிசையில் இந்த வாரம் பிளாக்பஸ்டர் தமிழ் படம் ரீ-ரிலீஸ் ஆகிறது..


ரீ-ரிலீஸ்

தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றிபெற்ற படங்களை சமீபகாலமாக ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள். இதில் கில்லி, மங்காத்தா, சச்சின், படையப்பா போன்ற படங்கள் ரீ-ரிலீஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்தன.

கில்லி, படையப்பா, மங்காத்தா வரிசையில் இந்த வாரம் பிளாக்பஸ்டர் தமிழ் படம் ரீ-ரிலீஸ் ஆகிறது.. | Soodhu Kavvum Movie Re Release On 20 February

அதிலும், ரீ-ரிலீஸில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை கில்லி படைத்துள்ளது. கடந்த வாரம் மௌனம் பேசியதே, உயிருள்ளவரை உஷா, காதலர் தினம், மின்னலே ஆகிய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டன. இதில் சூர்யாவின் மௌனம் பேசியதே திரைப்படம் இதுவரை ரூ. 40 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வார ரீ-ரிலீஸ்



தொடர்ந்து பல படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த வாரமும் மிகப்பெரிய வெற்றிபெற்ற படத்தை ரீ-ரிலீஸ் செய்கிறார்கள். அது வேறு யாருடைய படமும் இல்லை, நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013ஆம் ஆண்டு வெளிவந்த சூது கவ்வும் படத்தைதான் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்கின்றனர்.

கில்லி, படையப்பா, மங்காத்தா வரிசையில் இந்த வாரம் பிளாக்பஸ்டர் தமிழ் படம் ரீ-ரிலீஸ் ஆகிறது.. | Soodhu Kavvum Movie Re Release On 20 February

கண்டிப்பாக, ரீ-ரிலீஸாகும் சூது கவ்வும் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கும். மேலும், இப்படத்திற்கான டிக்கெட் விலை ரூ. 100 கோடி தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *