விஜய்யுடன் நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசிய நயினார் நாகேந்திரன்.. கண்டனம் தெரிவித்த திரிஷா

விஜய்
நடிகர் விஜய் தற்போது அரசியலில் முழுமையாக களமிறங்கி திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். விஜய் பேசுவதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மற்ற கட்சியை சேர்ந்தவர்களும் பேசி வருகிறார்கள்.
இதில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய்யுடன் நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசியது பெரும் சர்ச்சையானது. இது பேசுபொருளாக மாறிய நிலையில், மற்ற கட்சியை சேர்ந்தவர்களிடமும் கேள்வி கேட்கப்பட்டது.
இந்த நிலையில், நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு நடிகை திரிஷா கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
நடிகை திரிஷா கண்டனம்
இதுகுறித்து நடிகை திரிஷாவின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் விவாதிப்பது சரியில்லை. அருவருக்கத்தக்க வகையில் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
மாநில அரசியல் கட்சியில் உயர் பதவியில் இருக்கும் ஒருவரால் இதுபோன்ற விரும்பத்தகாத, பொருத்தமற்ற கருத்துகள் தெரிவிக்கப்படும் என நடிகை திரிஷா ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.
நடிகை திரிஷா எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல, அவ்வாறு தொடர்புபடுத்திக்க விரும்பவில்லை. அரசியலில் அவர் எப்போதும் நடுநிலையான நிலைப்பாட்டை உடையவர்.
நடிகை திரிஷாவின் பெயரை, அவருடன் தொடர்பில்லாத விஷயங்களில் சேர்க்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






