நானும் ஒரு முடிவு எடுத்துள்ளேன், குணசேகரன் சொன்ன அதிரடி விஷயம்… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்

நானும் ஒரு முடிவு எடுத்துள்ளேன், குணசேகரன் சொன்ன அதிரடி விஷயம்… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்


எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் டிவியில் அடுத்து என்ன அடுத்து என்ன என பரபரப்பின் உச்சமாகவே ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது.

குணசேகரன் என்ற ஆணாதிக்கம் கொண்ட ஒருவரை வீழ்த்தும் கதைக்களமாக இந்த தொடர் உள்ளது, அவர் வீட்டுப் பெண்களும் குணசேகரன் சதியில் இருந்து போராடி வெற்றிப்பெறும் கதையாக இந்த தொடர் இருக்கும் என்று பார்த்தால் அப்படியே தலைகீழாக உள்ளது.

ஒவ்வொரு வாரமும் மக்கள் பெண்கள் ஜெயிப்பது போல் கதை அமைப்பார்கள் என்று பார்த்தால் வில்லன்கள் கை ஓங்கியபடியே உள்ளது.

நானும் ஒரு முடிவு எடுத்துள்ளேன், குணசேகரன் சொன்ன அதிரடி விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் | Ethirneechal Thodargiradhu Promo 11 Feb 2026

புரொமோ

குணசேகரன் மீது குண்டாஸ் வழக்கு போட வைத்து தங்களது தொழிலில் முன்னேற ஆரம்பித்தார்கள் பெண்கள். ஆனால் குணசேகரன் வழக்கம் போல் எந்த வழக்கிலும் சிக்காமல் மீண்டும் வீட்டிற்கு வந்து பெண்களின் மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிட்டார்.

ஜனனி இப்போது குணசேகரனை விட கொடிய வில்லனிடம் சிக்கிக்கொண்டு தவித்து வருகிறார், அவரிடம் இருந்து எப்படி தப்பிப்பார் என தெரியவில்லை.

நானும் ஒரு முடிவு எடுத்துள்ளேன், குணசேகரன் சொன்ன அதிரடி விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் | Ethirneechal Thodargiradhu Promo 11 Feb 2026

தற்போது இன்றைய எபிசோட் புரொமோவில், அறிவுக்கரசி விசாலாட்சி சொன்ன விஷயத்தை குணசேகரனிடம் கூறுகிறார். இதைக்கேட்டதும் குணசேகரன், நானும் ஒரு பெரிய முடிவு எடுத்துள்ளேன், நாளை அதற்கான வேலைகளை முடித்துவிட்டு கூறுகிறேன் என்கிறார்.

அப்படி என்ன முடிவு எடுத்துள்ளார் என்பதை காண்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *