காதலர் தினத்தில் ரீ-ரிலீஸாகும் சூப்பர்ஹிட் காதல் படங்கள்.. லிஸ்ட் இதோ

காதலர் தினத்தில் ரீ-ரிலீஸாகும் சூப்பர்ஹிட் காதல் படங்கள்.. லிஸ்ட் இதோ


ரீ-ரிலீஸ்

புதிய திரைப்படங்களுக்கு இணையாக ரீ-ரிலீஸ் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கில்லி, மங்காத்தா, சச்சின் மற்றும் படையப்பா போன்ற படங்கள் ரீ-ரிலீஸில் பட்டையை கிளப்பின. இதில், ரீ-ரிலீஸில் அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது.

காதலர் தினம்

இந்த நிலையில், காதலர் தினத்தை ஒட்டி மௌனம் பேசியதே மற்றும் மின்னலே ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அந்த வரிசையில் தற்போது புதிதாக காதலர் தினம் திரைப்படமும் இணைந்துள்ளது.

சூர்யாவின் மௌனம் பேசியதே மற்றும் மாதவனின் மின்னலே ஆகிய இரண்டு படங்களும் பிப்ரவரி 13ஆம் தேதியும், காதலர் தினம் படம் பிப்ரவரி 14ஆம் தேதியும் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *