கூலி படத்திற்கு நெகடிவ் விமர்சனம்.. ரஜினி மகள் சௌந்தர்யா என்ன கூறி இருக்கிறார் பாருங்க

கூலி படத்திற்கு நெகடிவ் விமர்சனம்.. ரஜினி மகள் சௌந்தர்யா என்ன கூறி இருக்கிறார் பாருங்க


நடிகர் ரஜினிகாந்தின் கூலி படம் கடந்த வருடம் வெளியாகி இருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த அந்த படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இருப்பதாக தான் அதிகம் விமர்சனங்கள் வந்தது.

கூலி படம் A சான்றிதழ் பெற்றதால் 50 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக இயக்குனர் லோகேஷ் ஒரு மேடையில் பேசும்போது கூறி இருந்தார்.

கூலி படத்திற்கு நெகடிவ் விமர்சனம்.. ரஜினி மகள் சௌந்தர்யா என்ன கூறி இருக்கிறார் பாருங்க | Soundarya Rajinikanth On Coolie Negative Reviews

சௌந்தர்யா பதில்

இந்நிலையில் பிரபல விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் ரஜினி மகள் சௌந்தர்யாவை பேட்டி எடுத்து இருக்கிறார். ‘கூலி படம் எனக்கு பிடித்து இருந்தது, அதற்காக என்னை தாக்கினார்கள். உங்களுக்கு படம் பிடித்து இருந்ததா’ என சௌந்தர்யாவை அவர் கேள்வி கேட்டிருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த சௌந்தர்யா, “எனக்கு கடைசி 10 நிமிடங்கள் பிடித்து இருந்தது. அதில் இளம் லுக்கில் de-aging செய்து காட்டி இருப்பார்கள். ஆனால் தலைவர் ரஜினி ரசிகையாக அவரிடம் இருந்து இன்னும் நான் எதிர்பார்க்கிறேன். எனக்கு பிடித்து இருந்தது, ஆனால் எனது டாப் பேவரைட் படமாக அது இருக்காது.”

“தற்போதெல்லாம் மக்கள் அதிகம் வன்முறையை ரசிப்பதில்லை என்பது என் கருத்து” என சௌந்தர்யா கூறி இருக்கிறார். 

கூலி படத்திற்கு நெகடிவ் விமர்சனம்.. ரஜினி மகள் சௌந்தர்யா என்ன கூறி இருக்கிறார் பாருங்க | Soundarya Rajinikanth On Coolie Negative Reviews


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *