D55 படத்தில் தனுஷுடன் முதல் முறையாக இணைந்து சூப்பர்ஸ்டார்.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

D55
அமரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் D55.
கடந்த சில நாட்களாக படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் குறித்து தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.
முதலில் இப்படத்தின் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் என்கிற அறிவிப்பு வந்ததை தொடர்ந்து, இப்படத்தில் ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி ஆகிய இருவரும் கமிட்டாகியுள்ளனர் என அறிவித்தனர்.
மம்மூட்டி
இந்நிலையில், D55 படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் நடிகர் மம்மூட்டி இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலம் முதல்முறையாக தனுஷுடன் மம்மூட்டி கைகோர்த்துள்ளார்.
When the Big M chooses a story, it becomes history 🔥
Super excited to welcome Megastar @mammukka onboard #D55!
We are honoured! Thank you #Mammootty sir.@dhanushkraja @Rajkumar_KP @wunderbarfilms @RTakeStudios @Sai_Pallavi92 @sreeleela14 @SaiAbhyankkar @Shra2309 @azy905… pic.twitter.com/f21kdflsbR
— Wunderbar Films (@wunderbarfilms) February 4, 2026
மேலும், 7 ஆண்டுகளுக்கு பின் மம்மூட்டி தமிழில் நடிக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக 2019ஆம் ஆண்டு பேரன்பு படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.






