பராசக்தியில் முக்கிய காட்சிகளை நீக்கிய சென்சார்! அண்ணா பேசிய வசனமும் நீக்கம்

பராசக்தியில் முக்கிய காட்சிகளை நீக்கிய சென்சார்! அண்ணா பேசிய வசனமும் நீக்கம்


சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் பராசக்தி படம் நாளை ரிலீஸ் ஆகிறது. சென்சார் சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டாலும் தற்போது U/A சான்றிதழ் தரப்பட்டு இருப்பதால் ரிலீஸ் உறுதியாகி இருக்கிறது.

இருப்பினும் படத்தில் இருந்து பல முக்கிய காட்சிகள் மற்றும் வசனங்களை சென்சார் போர்டு நீக்கி இருக்கிறது.

பராசக்தியில் முக்கிய காட்சிகளை நீக்கிய சென்சார்! அண்ணா பேசிய வசனமும் நீக்கம் | Parasakthi Censor Cuts Important Scenes Trimmed

மாற்றங்கள்

நீக்கப்பட்ட வசனங்கள் மற்றும் காட்சிகள் பற்றிய முழு விவரம் வெளியாகி இருக்கிறது.  

  • ‘தீ பரவட்டும்’ என்ற வசனம் நீக்கப்பட்டு அதற்கு பதில் ‘நீதி பரவட்டும்’ இடம்பெறும்.
  • தீயிட்டு கொளுத்தும் காட்சிகள், வன்முறை காட்சிகள், இறந்த உடல்களை காட்டும் நேரம் 50% குறைப்பு.

  • ஹிந்தி அரக்கி என வரும் இடங்களில், அரக்கி என்ற வார்த்தை நீக்கம்.
  • ஹிந்தி அரக்கி உருவ பொம்மை எரிப்பு காட்சி நீக்கம்.
  • ஹிந்தி எழுத்துக்கள் மீது சாணம் அடிக்கும் காட்சி நீக்கம்.
  • “அந்த அச்சம் எவ்வளவு காலம் உங்களிடம் இருக்கிறதோ, அவ்வளவு காலமும் அண்ணாத்துரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்” என அண்ணா பேசும் காட்சி நீக்கம்.

இப்படி பல முக்கிய காட்சிகளை சென்சார் போர்டு நீக்கி இருக்கிறது.
 

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *