கார்த்திக் ஆர்யனுக்கு ‘லாபதா’ லேடீஸ் பட நடிகை?|Pratibha Ranta Replaces Sanya Malhotra, Joins Kartik Aaryan’s Naagzilla? Find Out

சென்னை,
கார்த்திக் ஆர்யன் கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘நாகஜில்லா’. கரண் ஜோஹர் தயாரிக்கும் இப்படத்தை மிருகதீப் சிங் லம்பா இயக்குகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தில் லாபதா லேடீஸ் பட நடிகை பிரதிபா ரந்தா இணையக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த வேடத்திற்கு சன்யா மல்ஹோத்ரா பரிசீலிக்கப்பட்டதாக கூறப்பட்டநிலையில், தற்போது பிரதிபா பரிசீலிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதிபா தற்போது மேடோக் பிலிம்ஸ் நிறுவனத்துடன் ஒரு படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






