தமிழ்நாட்டில் மட்டுமே லோகா படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க

தமிழ்நாட்டில் மட்டுமே லோகா படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க


லோகா

டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த படம் லோகா. சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இப்படத்தை துல்கர் சல்மான் தயாரித்திருந்தார். ரூ. 30 கோடி பட்ஜெட்டில் இப்படம் எடுக்கப்பட்டது.

இப்படத்தில் சாண்டி மாஸ்டர் மற்றும் நஸ்லன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் உலகளவில் ரூ. 250+ கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.

தமிழ்நாட்டில் மட்டுமே லோகா படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க | Lokah Movie Tamilnadu Box Office Collection

இதுவரை தென்னிந்திய அளவில் சோலோ ஹீரோயின் படங்களுக்கு கிடைக்காத வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்துள்ளது. இவ்வளவு பெரிய வசூலை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என படத்தின் தயாரிப்பாளர் துல்கர் சல்மான் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். லோகா படத்தின் வெற்றியை தொடர்ந்து இன்னும் ஐந்து படங்கள் இந்த யூனிவெர்சில் வெளிவரவுள்ளது.

தமிழக வசூல்

இந்த நிலையில், லோகா தமிழ்நாட்டில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மலையாள வெர்ஷன் ரூ. 4.8 கோடியும், தமிழ் டப் வெர்ஷன் ரூ. 15 கோடியும் சேர்த்து கிட்டத்தட்ட ரூ. 20 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமே லோகா படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க | Lokah Movie Tamilnadu Box Office Collection

இதுவரை மலையாளத்தில் இருந்து டப்பிங் செய்யப்பட்டு வந்த எந்த படமும் இவ்வளவு பெரிய வசூலை செய்ததில்லை என கூறுகின்றனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *