முன்னணி நடிகரின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள விஷால்.. எந்த படம் என்று உங்களுக்கு தெரியுமா

முன்னணி நடிகரின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள விஷால்.. எந்த படம் என்று உங்களுக்கு தெரியுமா


நடிகர் விஷால்

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக மகுடம் எனும் படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது.

முன்னணி நடிகரின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள விஷால்.. எந்த படம் என்று உங்களுக்கு தெரியுமா | Vishal Childhood Movie With Pandiarajan



சமீபத்தில் இவருக்கு நிச்சயதார்த்தமும் நடைபெற்று முடிந்தது. நடிகை சாய் தன்ஷிகாவிற்கும் விஷாலுக்கும் கடந்த மாதம் 29ம் தேதி விஷாலின் வீட்டில் நிச்சயம் நடந்தது. விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பு வெளிவரும் என கூறியுள்ளார்.

முன்னணி நடிகரின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள விஷால்.. எந்த படம் என்று உங்களுக்கு தெரியுமா | Vishal Childhood Movie With Pandiarajan

குழந்தை நட்சத்திரமாக விஷால்

2004ம் ஆண்டு வெளிவந்த செல்லமே படத்தின் மூலம்தான் நடிகர் விஷால் ஹீரோவாக அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பே சிறு வயதிலேயே பிரபல நடிகர் ஒருவரின் படத்தில் விஷால் நடித்துள்ளார்.

அன்றைய காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக இருந்த பாண்டியராஜன் உடன் இணைந்துதான் விஷால் நடித்துள்ளார்.

கடந்த 1988ம் ஆண்டு இயக்குநர் உமேஷ் பிரபாகர் இயக்கத்தில் பாண்டியராஜன் நடித்து வெளியான திரைப்படம்தான் ஜாடிக்கேத்த மூடி.

இப்படத்தை விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டி தயாரித்திருந்தார். அப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக விஷால் அறிமுகமானார். அந்த காட்சியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.



இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *