லோகா பட வெற்றி, 2-ம் பாகத்தில் நடிக்கப்போகும் பிரபல நடிகர்.. யார் தெரியுமா?

Lokah
டொமினிக் அருண் இயக்கத்தில் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் Lokah. இப்படத்தை முன்னணி ஹீரோவான துல்கர் சல்மான் தயாரித்திருந்தார்.
படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நஸ்லன், சாண்டி மாஸ்டர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
யார் தெரியுமா?
இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை 5 பாகங்களாக எடுக்க திட்டமிட்ட நிலையில், தற்போது இப்படத்தின் 2 – ம் பாகம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி, லோகா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லோகா படக்குழு உடன் அவர் இருக்கும் போட்டோ வெளியானதால் இப்படத்தின் 2 – ம் பாகத்தில் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.






