நடிகர் தனுஷின் குபேரா டிரைலர் வெளியீடு

நடிகர் தனுஷின் குபேரா டிரைலர் வெளியீடு


சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ், தற்போது இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் ‘குபேரா’ படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ராஷ்மிகா, ஜிம் சரப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் படத்தின் புரமோஷன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ‘குபேரா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இந்நிலையில், தான் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாக இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி இன்று 15-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதற்கு ஒரு காரணமும் சொல்லப்பட்டது. அதாவது, குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களிலேயே எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.

இதில் ஒருவர் மட்டுமே காயத்துடன் தப்பிய நிலையில் மற்ற அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாகியது. அதோடு அருகிலுள்ள கட்டிடத்தின் மீது மோதவே, அங்கு தங்கியிருந்த 20 மருத்துவர்கள் உள்பட பலரும் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில்தான் குபேரா பட தயாரிப்பாளர் தனது பட விழாவை ரத்து செய்தார். இந்த விழாவிற்காக முக்கிய பிரபலங்களை சிறப்பு விருந்தினராக அழைக்க முடிவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், எதிர்பாராத விபத்து குபேரா டிரைலரை ரத்து செய்ய வைத்துள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில்தான் குபேரா ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், நாகர்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா, இயக்குநர் சேகர் கம்முலா ஆகியோர் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அவர்களுடன் இணைந்து இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குபேரா டிரைலரை வெளியிட்டார். இதையடுத்து ஸ்டேஜில் வைத்து குபேரா படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டும் விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகளை இயக்குநர் சேகர் கம்முலா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முதலில் தெலுங்கு படத்திற்கான டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *