விபத்தில் சிக்கிய விஜய் டிவி சீரியல் ஹீரோ.. வெளிவந்த ஷாக்கிங் புகைப்படங்கள் இதோ

விபத்தில் சிக்கிய விஜய் டிவி சீரியல் ஹீரோ.. வெளிவந்த ஷாக்கிங் புகைப்படங்கள் இதோ


பொன்னி சீரியல் சபரி

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் முடிவுக்கு வந்த சீரியல்தான் பொன்னி. இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தவர் சின்னத்திரை நடிகர் சபரி நாதன். இவர் இதற்கு முன் வெள்ளைக்காரன் என்கிற சீரியலில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

விபத்தில் சிக்கிய விஜய் டிவி சீரியல் ஹீரோ.. வெளிவந்த ஷாக்கிங் புகைப்படங்கள் இதோ | Ponni Serial Sabari Met With Accident Had Surgery

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை ரோஸ்ட் செய்யும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் நடிகர் சபரியும் ஒருவர்.

விபத்தில் சிக்கிய சபரி

இந்த நிலையில், நடிகர் சபரி தற்போது தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் விபத்தில் சிக்கியதாகவும், அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டவதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

விபத்தில் சிக்கிய விஜய் டிவி சீரியல் ஹீரோ.. வெளிவந்த ஷாக்கிங் புகைப்படங்கள் இதோ | Ponni Serial Sabari Met With Accident Had Surgery

அவர் வெளியிட்ட பதிவில் “என் உடல்நிலை குறித்து எனக்கு நிறைய கேள்விகள் வந்துள்ளன? நான் நலமாக இருக்கிறேன், விரைவில் திரும்பி வருவேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சில நாட்களுக்கு முன்பு ஒரு விபத்துக்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். அறுவை சிகிச்சை செய்து கொண்டேன், ஒரு தட்டு பொருத்தப்பட்டது. மன்னிக்கவும், இப்போதைக்கு செய்திகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. உங்கள் பிரார்த்தனைகள் தேவை” என தெரிவித்துள்ளார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *