சிம்பொனியை தமிழகத்தில் நடத்தும் இளையராஜா!

சிம்பொனியை தமிழகத்தில் நடத்தும் இளையராஜா!


சென்னை,

இளையராஜா இன்று தனது 83-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இளையராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எனக்கு பிறந்த நாள் கூறிய முக்கிய பிரமுகர்களுக்கும், என்னை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும், சமூகவலைதளங்களில் வாழ்த்து கூறிக் கொண்டே இருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. பிறந்த நாள் வாழ்த்து கூற பல இடங்களில் இருந்து வெகு தூரத்தில் இருந்து சிரமப்பட்டு என்னை பார்க்க ரசிகர்கள் வந்துள்ளனர்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ” லண்டனில் நிகழ்த்திய தனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை, அதே ஆர்கெஸ்ட்ரா கலைஞர்களை வைத்து ஆகஸ்ட் 2-ம் தேதி தமிழ்நாட்டில் இசைக்க போவதாக ‘இசைஞானி’ இளையராஜா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக இளையராஜா கூறும் போது, “என்னுடைய மக்கள் அந்த சிம்பொனி இசையை கேட்டாக வேண்டும். உலகம் முழுவதும் நம் பெருமையை சொல்வதைப்போல அவர்களை நம் நாட்டிற்கு அழைத்து வந்து அதே இசை நிகழ்ச்சியை நம் மக்கள் முன்னிலையில் நடத்தப் போகிறேன், இந்த இனிய செய்தியை உலகமெங்கும் இருக்கும் மக்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *