4 பேர் செய்த தவறுக்காக மொத்த பாகிஸ்தானையும் குறை கூற முடியாது- விஜய் ஆண்டனி | You can’t blame the entire Pakistan for the mistakes of 4 people

4 பேர் செய்த தவறுக்காக மொத்த பாகிஸ்தானையும் குறை கூற முடியாது- விஜய் ஆண்டனி | You can’t blame the entire Pakistan for the mistakes of 4 people


சென்னை,

ஜம்மு – காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22-ம் தேதி பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களின் சந்திப்பின் போது பஹல்காம் தாக்குதல் குறித்து பேசினார். அதாவது, “பாகிஸ்தானில் உள்ள மக்களும் நம் சகோதரர்கள் தான். அவர்கள் எதுவும் செய்யவில்லை. பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் வீணாப்போன நாலு பேர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் குறை கூற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *