New Nobita and the Castle of the Undersea Devil திரை விமர்சனம்


Doraemon: New Nobita and the Castle of the Undersea Devil திரை விமர்சனம்

அனிமே படங்களுக்கு என்று உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது, அதிலும் சின்சன், டோரிமான் போன்ற கேரக்டர்களுக்கு இருக்கும் வரவேற்பு நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.

தற்போது Tetsuo Yajima இயக்கத்தில் தமிழ் டப்பிங்கில் வெளிவந்துள்ள இந்த Doraemon: New Nobita and the castle of the undersea devil எப்படியுள்ளது? பார்ப்போம்.

Doraemon: New Nobita and the Castle of the Undersea Devil திரை விமர்சனம் | Doraemon Movie Review

கதைக்களம்



நோபிட்டா டோரிமான் தன் நண்பர்களுடன் கோடை விடுமுறைக்கு என்ன செய்யலாம் என யோசிக்க, டோரிமான் கடலுக்கு அடியில் பல மலைகள் உள்ளது போகலாம் என சொல்ல எல்லோரும் ஓகே சொல்கின்றனர்.


அதே நேரத்தில் பல கால கப்பல் ஒன்று கடலுக்கு அடியில் இருக்க, அதையும் பார்க்க நோபிட்டா நண்பர்கள் முடிவெடுக்க, கடல் பயணம் தொடங்குகிறது, கடலுக்கு அடியில் டோரிமான் உதவியுடன் பல கேஜட்ஸ் பயன்படுத்தி செம ஹாப்பியாக இருக்கின்றனர்.

Doraemon: New Nobita and the Castle of the Undersea Devil திரை விமர்சனம் | Doraemon Movie Review


அப்படி ஒரு நாள் அந்த கப்பலை நோபிட்டா குழுவுடன் சந்திக்க, அந்த நேரத்தில் கடல் வாழ் மக்கள் சிலரால் இவர்கள் அனைவரும் கைது செய்யப்படுகின்றனர்.

பிறகு அந்த கடல் வாழ் மனிதர்களிடமிருந்து நோபிட்டா மற்றும் நண்பர்கள் தப்பித்தார்களா இல்லை வேறு ஏதும் பிரச்சனை வந்ததா? என்பதே மீதிக்கதை.


படத்தை பற்றிய அலசல்



டோரிமான் என்ற கார்டூன் கதாபாத்திரம் வைத்து படம் முழுவதும் முடிந்த அளவிற்கு போர் அடிக்காமல் கொண்டு சென்றதே வெற்றி தான், அதிலும் டோரிமான் கொண்டு வரும் பாகி என்கின்ற கார் ஒரு கதாபாத்திரமாகவே வந்து செல்கிறது.


படத்தின் முதல் பாதியில் பல இடங்களில் அந்த கார் தான் இவர்களை வழி நடத்துகிறது, அந்த காட்சிகள் எல்லாமே செம ஜாலியாகவே செல்கிறது, அதிலும் கடலை சுற்றி காட்டும் காட்சிகள், பல வகை மீன்களை காட்டும் காட்சி என ரசிக்க வைக்கிறது.

Doraemon: New Nobita and the Castle of the Undersea Devil திரை விமர்சனம் | Doraemon Movie Review


அதிலும் கிளைமேக்ஸில் மனிதாபிமானம் தான் முக்கியம் அது இருந்தாலே எல்லோரும் சந்தோஷமாக இருக்கலாம் என ஒரு கார்டூன் படத்தில் சிறுவர்களை வைத்து காட்டிய விதம் சூப்பர்.

அதே நேரத்தில் ஒரு கப்பலை படு ஹைப் ஏற்றி காட்டி, கடைசியில் சந்திரமுகி பாம்பு போல் அதை ஆக்கியது ஏன் என்று தெரியவில்லை.

அதே நேரத்தில் இந்த டோரிமான் ஹாலிவுட் அனிமே போல் இல்லாமல், ஜப்பான் அனிமே போல் இருப்பது இந்த டைப் ஆப் அனிமேஷன் பார்ப்பவர்களுக்கு மட்டுமே பிடிக்கும்படி உள்ளது, எல்லோருக்கும் செட் ஆகாது.

டெக்னிக்கல் ஆக இசை, அனிமே ஒர்க் எல்லாம் நன்று.



க்ளாப்ஸ்



கதைக்களம், நாம் சிறு வயதில் கேட்ட கதையை அழகாக காட்டிய விதம்.

கிளைமேக்ஸ் பாகி கார் வைத்து சொன்ன மெசெஜ்.


பல்ப்ஸ்



இரண்டாம் பாதி எல்லாம் நிறைய நேரம் பேசிகொண்டே தான் இருக்கின்றனர்.

எக்ஸேட் ஆகி பார்ப்பது போல் காட்சிகள் பெரிதும் இல்லை.


மொத்தத்தில் இந்த டோரிமான் விமர்சனம் எல்லாம் இரண்டாம் பட்சமே, குழந்தைகள் இருந்தால் குடும்பத்தோடு சென்று வாருங்கள், நிறைய பெற்றோர்களுக்கு பிடிக்க வாய்ப்பில்லை, குழந்தைகள் கொண்டாடுவார்கள்.


2.75/5


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *