தேரே இஷ்க் மே 7 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தேரே இஷ்க் மே. இப்படத்தில் கதாநாயகியாக க்ரீத்தி சனோன் நடித்திருந்தார்.
மேலும் பிரகாஷ் ராஜ் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
காதல் கதைக்களத்தில் உருவாகி வெளியான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
வசூல்
இந்த நிலையில் 7 நாட்களில் உலகளவில் தேரே இஷக் மே திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, தேரே இஷ்க் மே திரைப்படம் உலகளவில் 7 நாட்களில் ரூ. 118.76 கோடி வசூல் செய்துள்ளது.






