சன் டிவியில் திங்கட்கிழமை தொடங்கும் புது சீரியல்! இப்படி ஒரு கதையா
தமிழ்நாட்டில் தற்போது டிஆர்பியில் சன் டிவி தான் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது. அந்த சேனலில் வரும் சீரியல்களுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
அவர்களுக்காகவே புதுப்புது சீரியல்களாக சன் டிவி அறிமுகப்படுத்தி வருகிறது.
அபிராமி
அந்த வரிசையில் அபிராமி என்ற புது சீரியல் வரும் திங்கள் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. மதியம் 1.30க்கு இந்த சீரியல் வர இருக்கிறது.
அதில் படிக்காதவர் என்பதாலேயே ஹீரோயினை மட்டம் தட்டும் கணவர், அதை விட கேவலப்படுத்தும் மகன்.. ஆனால் அதை பார்த்து மகள் மட்டும் வருத்தப்படுகிறார்.
இப்படி ஒரு கதை உடன் வரும் அபிராமி சீரியல் ப்ரோமோவை பாருங்க.
