அய்யனார் துணை நடிகை மதுமிதாவுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ்.. கொடுத்தது யார் பாருங்க

விஜய் டிவியில் அய்யனார் துணை சீரியலில் தற்போது நடித்து வருபவர் மதுமிதா. அவர் இதற்கு முன்பு சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அய்யனார் துணை சீரியல் மூலமாக சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார் அவர். விஜய் டிவியின் நம்பர் 1 தொடராகவும் அது இருக்கிறது.
நடிகை மதுமிதா சீரியலில் தான் ஹோம்லியாக வருகிறார், ஆனால் நிஜத்தில் படு மாடர்ன். அவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு ட்ரிப் செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின்றன.
பிறந்தநாள்
தற்போது மதுமிதாவின் பிறந்தநாளுக்கு அவரது தோழி ஒருவர் சர்ப்ரைஸ் கொடுத்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.






