They are trolling me for money on social media – Pooja Hegde | சமூக ஊடகங்களில் காசுக்காக என்னை ட்ரோல் செய்கிறார்கள்

They are trolling me for money on social media – Pooja Hegde | சமூக ஊடகங்களில் காசுக்காக என்னை ட்ரோல் செய்கிறார்கள்


தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, கைவசம் விஜய் நடிக்கும் ஜனநாயகன், சூர்யா நடிக்கும் ரெட்ரோ ஆகிய படங்களை வைத்துள்ளார். மேலும் ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி படத்திலும் நடித்துள்ளார். அதோடு ராகவா லாரன்ஸின் காஞ்சனா நான்காம் பாகத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.இதனிடையே இந்தியில் வருண் தவானுக்கு ஜோடியாக இன்னும் பெயரிடப்படாத தலைப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

நடிகை பூஜா ஹெக்டே தன்னைப் பற்றி வரும் ட்ரோல்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் “ட்ரோல்களைப் பார்க்கும் போது பல நேரங்களில், அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிஆர் விஷயத்தில் நான் மிகவும் மோசமாக இருக்கிறேன். மீம் பக்கங்கள் என்னை தொடர்ந்து ட்ரோல் செய்த ஒரு காலம் இருந்தது, அவர்கள் ஏன் என்னைப் பற்றி தொடர்ந்து நெகடிவிட்டி பரப்புகிறார்கள் என்று நான் யோசித்தேன். அதுவும் என்னை சரியாக டார்கெட் செய்து ட்ரோல் செய்வதை நான் உணர்ந்தேன். மற்றவர்களைக் குறைத்து மதிப்பிட ஒரு கும்பல் நிறைய பணம் செலவிடுகிறார்கள் என்று பின்னர் எனக்குப் புரிந்தது. அதை நான் அறிந்தபோது, என் பெற்றோரும் நானும் மிகவும் வருத்தப்பட்டோம். ஆனால் நான் அதை ஒரு பெருமையாக எடுத்துக் கொண்டேன். ஏனென்றால் யாராவது உங்களை குறைத்து மதிப்பிட விரும்பினால், நீங்கள் அவர்களை விட உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒன்றும் பிரச்சனை இல்லை என்று நான் என் பெற்றோரை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு, அது அதிகமாக இருந்தது. என்னை ட்ரோல் செய்ய சிலர் லட்சக்கணக்கில் செலவிடுகிறார்கள் என்று நான் கண்டுபிடித்தேன்

பின்னர் என்னை ட்ரோல் செய்யும் மீம் பக்கங்களைத் தொடர்பு கொண்டு பிரச்சனை என்னவென்று அவர்களிடம் கேட்கும்படி என் குழுவிடம் சொன்னேன். அவர்கள் சொன்ன பதில் நேரடியாக இருந்தது. உங்களை ட்ரோல் செய்ய எங்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். இனி இதை நிறுத்தவோ, அல்லது அந்த அணியை திருப்பி ட்ரோல் செய்யவோ நீங்க எவ்வளவு தருவீர்கள் என கேட்கிறார்கள். அது மிகவும் விசித்திரமாக இருந்தது. ஆனால் என்னை ஏன் ட்ரோல் செய்கிறார்கள் அல்லது அதற்குப் பின்னால் என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை ” என்று பூஜா கூறினார்.

ரஜினிகாந்த் – லோகேஷ் கூட்டணியில் உருவாகும் கூலி திரைப்படத்தில் ஒரு நடன காட்சியிலும் பூஜா ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *