வெற்றிமாறன் மீது ஐ.ஜியிடம் புகார் – திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா ”பேட் கேர்ள்” படம் ?|Complaint to IG against Vetrimaaran

மதுரை,
பேட் கேர்ள் திரைப்பட டீசர் விவகாரம் தொடர்பாக வெற்றிமாறன் உள்ளிட்ட அப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது ஐ.ஜி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வர்ஷா பரத் இயக்கத்தில் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘பேட் கேர்ள்’. இதில், சிறுவர்களை தவறாக சித்தரித்து இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில், மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஒருவர் தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்காவிடம் புகார் அளித்தார். அதில், சிறுவர்-சிறுமியரின் ஆபாச காட்சிகள் இடம்பெற்ற ‘பேட் கேர்ள்’ திரைப்பட டீசரை தயாரித்த தயாரிப்பாளர்கள் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப், இயக்குனர் வர்ஷா பரத், நடிகர்கள் உள்ளிட்ட திரைப்படக்குழுவினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் ‘பேட் கேர்ள்’ படம் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.