வெப்தொடர் தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்

வெப்தொடர் தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘விக்ரம்’. மேலும் இந்த படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் உலகளவில் இரண்டே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலைக் குவித்தது.

விக்ரம் படத்தைப் பொறுத்தவரை இதில் நடித்துள்ள முக்கியக் கதாபாத்திரங்களுக்கு இணையாக அதில் ஏஜெண்ட் டீனா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வசந்தியின் கேரக்டரும் வெகுவாகக் கவனம் ஈர்த்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள அவர் தொடர்பான ஆக்ஷன் காட்சிகளுக்குத் திரையரங்கமே அதிர்கிறது. கதையில் முக்கியமான நேரத்தில் முடிச்சு அவிழ்க்கப்படும் அவர் தொடர்புடைய காட்சிகள், படத்துக்குப் பலம் சேர்க்கும் விதமாகவும் அமைந்துள்ளது. பார்வையாளர்கள் பலரும் ஏஜெண்ட் டீனா கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் ஆகிவிட்டார்கள் எனச் சொல்லும் அளவுக்கு அவரது கேரக்டர் அமைந்திருக்கிறது. ‘ஏஜெண்ட் டீனா’ கதாபாத்திரத்தில் நடித்துள்ள வசந்தி சுமார் 30 ஆண்டுகளாகவே சினிமாத்துறையில்இருந்து வருகிறார் . நடன உதவி இயக்குநராகப் பல வெற்றிப் படங்களில் பணியாற்றி உள்ளார் வசந்தி. பிருந்தா மாஸ்டர் மற்றும் தினேஷ் மாஸ்டர் உள்ளிட்டோருடன் உதவி நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ள வசந்தி, முன்னணி நடிகைகளான திரிஷா மற்றும் சமந்தாவுக்கு மனசெல்லாம், பாணா காத்தாடி ஆகிய படங்களில் நடனத்தில் பணிபுரிந்துள்ளாராம்.

.இந்த நிலையில், நேர்காணலில் பேசிய லோகேஷ் கனகராஜ், “ஏஜெண்ட் டீனா கதாபாத்திரத்தை வைத்து வெப்தொடர் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகளும் ஆரம்பமாகியுள்ளன. இத்தொடரை வேறு ஒருவர் இயக்குகிறார்.” எனத் தெரிவித்துள்ளார். இத்தொடர் ஏஜெண்ட் டீனா என்பவர் யார், விக்ரம் படத்தில் குறிப்பிடப்பட்ட 1987ம் ஆண்டில் என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை மையமிட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *