‘ரெட்ரோ’ படத்தின் கதையை இவருக்கு தான் எழுதினேன் – கார்த்திக் சுப்பராஜ் | I wrote the story of the film ‘Retro’ for him

‘ரெட்ரோ’ படத்தின் கதையை இவருக்கு தான் எழுதினேன் – கார்த்திக் சுப்பராஜ் | I wrote the story of the film ‘Retro’ for him


சென்னை,

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பீட்சா படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களால் அறியப்படுபவர். அதைத் தொடர்ந்து இவர் ஜிகர்தண்டா, பேட்ட, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவரது இயக்கத்தில் ‘ரெட்ரோ’ எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணனின் இசையில் உருவாகியுள்ள இப்படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், “நான் முதலில் ரெட்ரோ படத்தின் கதையை ரஜினி சாரை மனதில் வைத்து தான் எழுதினேன். ரஜினி சாருக்காக எழுதிய போது இது முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் கதையாக இருந்தது. அதன் பிறகு ஆக்ஷன் கதையை சற்று மாற்றி காதல் கதையாக சூர்யா சாரிடம் சொன்னேன்” என்று கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *