யாராவது வரம்பு மீறினால் நான் பேயாக மாறுவேன்- ரேஷ்மா எச்சரிக்கை | If anyone crosses the line, I will turn into a ghost

சென்னை,
சின்னத்திரை நடிகைகளில் முன்னணியில் இருப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி. ஒரு சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்றதின் மூலம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் இருந்து ‘நியூட்ரல் ரேஷ்மா’ என்றும் அழைக்கப்பட்டார். உதட்டை பெரிதாக்க இவர் அறுவை சிகிச்சை செய்தது சர்ச்சையானது.
சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவர்ச்சி படங்கள் வெளியிட்டு தாராள நடிகையாக திகழும் ரேஷ்மா, சமீபத்தில் வெளியிட்ட படங்கள் இளசுகளை துடிக்க வைத்துள்ளன.
ஆனால் அந்த படங்களுடன், ‘யாராவது வரம்பு மீறினால், எல்லைகளை தாண்டினால் நான் பேயாக மாறுவேன்’ என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ‘இப்படி சொன்னால் எப்படி? இதற்கு பருத்திமூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாமே…’ என்று சில குறும்புக்கார ரசிகர்கள் வருத்தம் கொள்கிறார்கள்.