‘பி​யாண்ட் தி கேரளா ஸ்டோரி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘பி​யாண்ட் தி கேரளா ஸ்டோரி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


சென்னை,

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்த படத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த​நிலை​யில் அந்​தப் படத்​தின் அடுத்த பாக​மாக ‘பி​யாண்ட் தி கேரளா ஸ்டோரி’ என்ற படம் உரு​வாகி வருகிறது. இந்த படத்தை காமாக்யா நாராயண் சிங் இயக்​கி வருகிறார். ‘கேரளா ஸ்டோரி’ படத்​தைத் தயாரித்த விபுல் அம்​ருத்​லால் ஷா தயாரிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 27ந் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *