நடிகர் `லொள்ளு சபா’ வெங்கட்ராஜ் காலமானார்|Lollu Sabha Venkatraj passes away

சென்னை,
சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நடிகர் `லொள்ளு சபா’ வெங்கட்ராஜ் காலமானார்.
‘லொள்ளு சபா’ நிகழ்ச்சி இன்றும் பலரது பேவரைட். சந்தானம், யோகி பாபு எனப் பல முன்னணி நடிகர்களை உருவாக்கிய இந்த நிகழ்ச்சியில், தனது எதார்த்தமான நடிப்பால் மக்களைக் கவர்ந்தவர் நடிகர் வெங்கட்ராஜ்.
சின்னத்திரை மட்டுமின்றி சினிமாவிலும் பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மனிதன், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், டிக்கிலோனா ஆகிய படங்களில் நடித்துள்ளார்
இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் சினிமா உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்கள் வாயிலாகப் பலரும் அவருக்குத் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.






