தொடர்ந்து 3 வெற்றி படங்கள்…ஹாட்ரிக் அடித்த ராஷ்மிகா மந்தனா

மும்பை,
கடந்த 2016-ம் ஆண்டு வெளியான “கிரிக் பார்ட்டி” என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத்தொடர்ந்து, “கீதா கோவிந்தம்”, “டியர் காம்ரேட்”, “பீஷ்மா” உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
‘சுல்தான்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், பாலிவுட்டில் ‘அனிமல்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் வசூல் சாதனை படைத்தது. அதனைத்தொடர்ந்து, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படம் புஷ்பா 2. இது ரூ. 1,000 கோடிக்கு மேல் வசூல் செய்து வரலாறு படைத்தது.
இதனையடுத்து, ராஷ்மிகா நடிப்பில் கடந்த 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான படம் சாவா. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவ்வாறு அனிமல், புஷ்பா 2, சாவா என ஹாட்ரிக் வெற்றி படங்களை ராஷ்மிகா மந்தனா கொடுத்திருக்கிறார்.