தனுசுக்காக பிரத்யேகமாக ஸ்கிரிப்ட் எழுதி வருகிறேன்- லப்பர்பந்து பட இயக்குனர் | I am writing a script specifically for Dhanush

சென்னை,
லப்பர் பந்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்தவர் தமிழரசன் பச்சமுத்து. இவர் தனது முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளார். நேர்த்தியான இயக்கத்தின் மூலம் லப்பர் பந்து திரைப்படத்தை இயக்கி அனைவரையும் ரசிக்க வைத்தார்.
இதற்கிடையில், தமிழரசன் பச்சமுத்து அடுத்ததாக என்ன படம் இயக்கப் போகிறார்? யாரை வைத்து இயக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு பலருக்கும் இருந்து வருகிறது. அந்த வகையில், தமிழரசன் பச்சமுத்து நடிகர் தனுசை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து பேசியதாவது, “தனுசுடன் கலந்துரையாடி, அவருக்காகவே பிரத்யேகமாக ஸ்கிரிப்ட் எழுதி வருகிறேன். இந்த படம் ரசிகர்களையும் பொது ரசிகர்களையும் திருப்திப்படுத்தும். லப்பர்பந்து படத்தை விட சிறப்பாக இருக்கும்” என்று கூறி உள்ளார்.